வரலாற்றில் இன்று 05.11.2016
நிகழ்வுகள்
1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
1556 – முகலாயப் பேரரசு அக்பர் இந்தியாவின் அரசனானான்.
1913 – ஐக்கிய ராஜ்ஜியம்  சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1917 – அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட்  அரசைக் கைப்பற்றினார்.
1940 – பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945 – நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
1996 – பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
2006 – 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.
பிறப்புக்கள்
1854 – பவுல் செபாடியர், பிரெஞ்சு வேதியியலாளர், வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர். (d. 1941)
1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
1920 – டக்லஸ் நார்த், அமெரிக்க பொருளியலாளர், பொருளியலுக்கான நோபல் பரிசு வென்றவர்.
1948 – வில்லியம் டானியல் பிலிப்ஸ், அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு வென்றவர்.
1952 – வந்தனா சிவா, இந்திய இயற்பியலாளர்.
1955 – கரண் தபார், இந்திய நிருபர்.
1988 – விராட் கோலி, இந்திய துடுப்பாட்டக்காரர்.
இறப்புகள்
1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
1879 – ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (பி. 1831)
1975 – எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)
2011 – பூபேன் அசாரிகா, இந்திய பாடகர், இயக்குனர் மற்றும் கவிஞர் (b. 1926)