வரலாற்றில் இன்று 07.12.2016

வரலாற்றில் இன்று 07.12.2016

டிசம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 341 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 342 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 24 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1787 – டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.

1900 – மாக்ஸ் பிளாங்க் தனது பேர்லின் இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற கரும்பொருள் வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.

1917 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது ஐக்கிய அமெரிக்கா போரை அறிவித்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது கனடா போரை அறிவித்தது.

1949 – சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.

1972 – அப்போலோ கடைசி விண்கலம் “அப்போலோ 17” சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1975 – கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது.

1988 – யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.

1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

பிறப்புக்கள்

1928 – நோம் சோம்சுக்கி, அமெரிக்கப் பேரறிஞர்

இறப்புகள்

1947 – நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)

1993 – வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)

1998 – மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா – பேர்ள் துறைமுக நாள்

கொடி நாள்