வரலாற்றில் இன்று 12.12.2016

வரலாற்றில் இன்று 12.12.2016

டிசம்பர் 12  கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது.

1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.

1901 – அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.

1911 – இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.

1941 – அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக்கு அப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்தது.

1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.

1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

1979 – ரொடீசியாவின் பெயர் ஜிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.

1991 – ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1997 – இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1863 – எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)

1927 – ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)

1949 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்

1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்

1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

1931 – சௌகார் ஜானகி, தென்னிந்திய நடிகை

இறப்புகள்

1940 – தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)

2006 – இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட  ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

சிறப்பு நாள்

கென்யா – விடுதலை நாள் (1963)

கார்ட்டூன் கேலரி