வரலாற்றில் இன்று 16.12.2016

--

வரலாற்றில் இன்று 16.12.2016

டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1925 – இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 – பஹ்ரேன் பிரிட்டனிடம்  இருந்து விடுதலை பெற்றது.

1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)

1930 – லலிதா – திரைப்பட நடிகை (திருவிதாங்கூர் சகோதரிகளில் மூத்தவர் (பத்மினி, ராகினி) (இ. 1982)

1933 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)

இறப்புகள்

1916 – கிரிகோறி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு, (பி. 1869)

சிறப்பு நாள்

பாஹ்ரேன் – தேசிய நாள் (1971)
வங்காள தேசம் – வெற்றி நாள் (1971)
கசக்ஸ்தான் – விடுதலை நாள் (1991)
நேபாளம் – அரசியலமைப்பு சட்ட நாள் (1962)