வரலாற்றில் இன்று அக்டோபர் 20
அக்டோபர் 20 (October 20) கிரிகோரியன் ஆண்டின் 293 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 294 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
1827 – ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1941 – கிறகுஜேவாச் படுகொலைகள்: சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
1944 – கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
1955 – த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.
1946 – புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1973 – சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
1976 – மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982 – இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
1982 – மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு  கால் பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
2001 – இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004 – முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
பிறப்புக்கள்
1469 – குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
1884 – டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ. 1952)
1923 – தொ. மு. சி. ரகுநாதன், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)
1923 – வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முதல்வர்
1925 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர்
1946 – எல்ஃப்ரீத் ஜெலினெக், ஆஸ்திரிய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்
1954 – ந. செல்வராஜா, இலங்கையை சேர்ந்த நூலகவியலாளர், ஆய்வாளர்
1971 – ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
1978 – வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
1984 – கார்ல் கோரி, ஆஸ்திரிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)
1984 – போல் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1902)
2008 – ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)
2014 – ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
சிறப்பு நாள்
பஹாய் சமயம் – புனித நாள்