வரலாற்றில் இன்று 21.11.2016
நவம்பர் 21  கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1791 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலை.
stamp
1969 – முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
 1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
2004 – டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த சேதத்தை விளைவித்தது.
பிறப்புக்கள்
1902 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், போலந்து-அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)
1924 – மில்கா பிலானிஞ்ச், முன்னாள் யுகோசுலாவியப் பிரதமர் (இ. 2010)
1931 – ரேவாஸ் தொகொனாத்சே, ஜோர்ஜிய அறிவியலாளர், (இ. 1985)
1948 – மைக்கல் சுலைமான், முன்னாள் லெபனானிய அரசுத்தலைவர்
1970 – ஜஸ்டின் லாங்கர், முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
raman
1970 – சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888)
1996 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)
சிறப்பு நாள்
உலகத் தொலைக்காட்சி நாள்
வங்காள தேசம் – இராணுவத்தினர் நாள்