வரலாற்றில் இன்று 25.11.2016

வரலாற்றில் இன்று 25.11.2016

நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1542 – ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.

1758 – பிரிட்டன் படைகள் பிரான்சிடமிருந்த பென்சில்வேனியாவை கைப்பற்றியது

1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.

1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

andra-cyclone

1867 – அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.

1952 – அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.

1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.

1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1844 – கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)

1952 – இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

imrankhan

இறப்புகள்

1964 – துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)

1974 – ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)

1979 – பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்

பொஸ்னியா ஹெர்செகோவினா – தேசிய நாள் (1943)

சுரிநாம் – விடுதலை நாள் (1975)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

You may have missed