வரலாற்றில் இன்று 26.11.2016
நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1778 – ஹவாய் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் ஜேம்ஸ் குக்.
1842 – நாட்டர்டாம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
1950 – மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் மீதான தடை நீக்கப்பட்டது.
2003 – கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.
2008 – 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
2013 – இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.
பிறப்புக்கள்
1921 – வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)
1939 – அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)
prabaharan
1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்
1983 – கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்

கிரிச் ஹக்ஸ்
கிரிச் ஹக்ஸ்

இறப்புகள்
1504 – முதலாம் இசபெல்லா (பி. 1451)
2006 – ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை