வரலாற்றில் இன்று 28.11.2016
நவம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 – ஹவாய் தீவை ஐரோப்பா, பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1912 – அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரிட்டன் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960 – மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
1991 – தெற்கு ஒசேத்தியா ஜார்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.
பிறப்புக்கள்
1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)
1876 – பெர்ட் வோக்லர், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் (இ. 1946)
1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்
1967 – ஆன்னா நிக்கோல் ஸ்மித், அமெரிக்க நடிகை (இ. 2007)
1984 – ஆன்டுரூ போகட், ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
1987 – கிரேய்க் கீஸ்வெட்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (பி. 1827)
1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கனடிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பி. 1861)
1954 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)
சிறப்பு நாள்
அல்பேனியா – விடுதலை நாள் (1912)
மவுரித்தேனியா – விடுதலை நாள் (1960)