*நாசாவின் பாத் பைண்டர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது* 

4.12.1996-ல் நாசாவில் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்ட ‘பாத் பைண்டர்’ எனும் விண்கலம் 1997-ல் செவ்வாயில் ‘ஏரிஸ் பள்ளம்’ என்னும் இடத்தில் தரை இறங்கியது.

பின் தான் சுமந்து சென்ற ‘சோஜோனர்’ எனும் ஆறுசக்கர வண்டி மூலம் செவ்வாய் மண்ணை ஆராய்ந்தது.

அந்த சோதனையின்போது பூமியின் கடற்படுகை மற்றும் நிலவின் தரைகளில் உள்ளது போன்ற ‘பசால்ட்’ ரகப் பாறைகள் செவ்வாயில் அதிகம் என்பதும், தென் அமெரிக்க மேலைக் கடலோரம் “அண்டிஸ்” பிரதேசத்தில் உறைந்த எரிமலைக்குழம்பு போன்று 60 சதவீதம் சிலிக்கா அடங்கிய கற்கள் உள்ளன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்*

* 1941 – நாசி ஜெர்மனியினரால் போலந்தில் “லூவோவ்” என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.

* 1946 – 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

* 1976 – உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இஸ்ரேலிய கமாண்டோப் படையினர் விடுவித்தனர்.

* 1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில் வேனியாவில் இடம்பெற்றது