இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (01/11/2017)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (01/11/2017)

1.       அதிக பட்ச சில்லறை விலை என்பது ஜி எஸ் டியையும் சேர்த்து இருக்க வேண்டும் என ஜி எஸ் டி கவுன்சிலுக்கு அசாம் நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா யோசனை தெரிவித்துள்ளார்.   தற்போது அதிக பட்ச விலைக்கு மேல் ஜி எஸ் டி வசூலிக்கப்படுவது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மேலும் வரிச்சுமை ஏற்படுத்துவதால் அதிக பட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பது குற்றம் எனவும் சட்டத்தை மாற்றி அமைக்கவும் யோசனை கூறி உள்ளார்.

2.       பிரதம மந்திரி இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 3 கோடிக்கும் மேல் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.   வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் இந்த இணைப்பை இன்னும் 3 கோடி பேருக்கு வழங்கக் கோரி எண்ணெய் நிறுவனங்கள் அரசிடம் சம்மதம் கேட்டுள்ளன.  இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த திட்டத்துக்கான ஒப்புதலை அரசு அளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

3.       பாரத ஸ்டேட் வங்கி தனது அடக்க விலையை ஒட்டிய கடன் விகிதங்களை 7.95% சதவிகிதத்திலிருந்து 8% ஆக மாற்றி அமைத்துள்ளது.   கடந்த 10 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக நேற்று இந்த மாறுதலை அறிவித்துள்ளது.