இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (13.10.2017)

ன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (13.10.2017)

1.   அரசுக்கு சொந்தமான எலிகாப்டர் சேவை நிறுவனமான பவன் ஹன்ஸ் லிமிடெட் இன் 51% சதவீத பங்குகள் விற்பனைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் 49% சதவிகித பங்குகள் ஓ என் ஜி சி இடம் உள்ளனர்.  இதன் மூலம் நிறுவனத்தின் நிர்வாகம் புதிய பங்குதாரரிடம் மாறி விடும் எனவும் அது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் நலன் விளைவிக்கும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த சர்வதேச டெண்டரின் கடைசி தேதி வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆகும்.

2.   இந்திய விமான நிலைய ஆணையம் (ஏர்போர்ட் அதாரிடீஸ் ஆஃப் இந்தியா) விஜய் மல்லையா கொடுத்த காசோலைகள் திரும்ப வந்ததால் அவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானங்களை விமான நிலையத்தில் இறக்க, நிறுத்தி வைக்க, மற்றும் பயணப்படுத்துவதற்கான கட்டணங்களுக்காக ரூ.100 கோடிக்கான தொகைக்காக இரு காசோலைகள் கொடுக்கப்பட்டன.  இரண்டும் வங்கியில் அவரது கணக்கு முடக்கப் பட்டதால் திரும்ப வந்து விட்டன.

3.   உலகப் பொருளாதார் முன்னேற்றத்துக்கு தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என உலக வங்கி அறிவித்துள்ளது.  வெகு நாட்களுக்குப் பின் உலக பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக உலக வங்கி தலைவர் ஜிம் யொங் கிம் தெரிவித்துள்ளார். தற்போது பொருளாதார நிலையில் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.  ஆனால் முதலீடு செய்ய பலரும் அஞ்சுகின்றனர்.  அதனால் முதலீடுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே பொருளாதார முன்னேற்றம் மேம்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.

4.   டாடா டெலிசர்வீசஸ் நிருவனம் பாரதி ஏர்டெல்லுடன் இணைகிறது.  தொலைதொடர்புத்துறைக்கு டாடா செலுத்த வேண்டிய ஸ்பெட்ரம் அலைவரிசைக்கான ரூ.10000 கோடியில் 80% டாடாவும் மீதமுள்ள தொகையை ஏர்டெல்லும் செலுத்துகிறது.  தற்போதுள்ள டாடாவின் ஃஃபைபர் நெட் ஒர்க்கை ஏர்டெல் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  டாடா டெலிசர்வீசின் கடனை டாடா சன்ஸ் நிருவனம் ஏற்றுக்கொள்கிறது.

5.   இந்தியாவின் தொழில்துறை, உற்பத்தியில் ஆகஸ்ட் மாதம் 4.3% வளர்ச்சி அடைந்துள்ளது.  ஜி எஸ் டி அறிமுகம் செய்யப்பட்டதால் அதற்கு முன்பிருந்த இருப்பை அனைத்து தொழிற்சாலைகளும் தங்களது டீலர் மூலம் விற்பனை செய்ததால் இருப்புச் சரக்கு குறைந்தது.  அதை ஈடு கட்ட அனைத்து தொழிற்சாலைகளும் உற்பத்தியை பெருக்கி உள்ளது.  இந்த வளர்ச்சியானது, அனைத்து துறைகளிலும் பரவலாக காணப்படுகிறது.  அது மட்டுமின்றி பண்டிகைக் காலத்தில் விற்பனை கூடும் என்னும் அனுமானத்திலும் இந்த உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

6.   தற்போது பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சிறிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கவே அதிகம் விரும்புகின்றனர் என பங்குச் சந்தையின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மொனிட்ஸ் கிரீமர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் தற்போதுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்குகளின் விலையில் சரிவு ஏற்படும் என்றும், பங்குச் சந்தையில் பெரிய மாறுதல் ஏற்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.

7.   ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை அதிகாரி குமார் மங்களம் பிர்லா, “பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய நெடும் காலம் ஆகும்.  நிறறுவன முதலீடுகளில் முன்னேற்றம் அடைய குறைந்து ஓராண்டாவது ஆகும்,  வங்கிகள் போதுமான அளவு கடன் வழங்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே தொழில் துறை வளர்ச்சி அடையும். இதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு உடனடியாக எடுப்பது அவசியம். டாடா பிர்லா போன்ற வளர்ந்த நிறுவனங்களில் பாதிப்பு அதிகம் இல்லை எனினும் இது வளரும் நிறுவனங்களை பெரிதும் பாதிப்பதால் உடனடி நடவடிக்கை தேவை” எனக் கூறி உள்ளார்.