இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (20.10.17)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (20.10.17)

1.       வருமானவரித்துறை வரி செலுத்துவோருக்கு உதவ ஆன்லைன் சாட் வசதி தொடங்கி உள்ளது.  இதன் மூலம் வரி செலுத்துவோர் தங்களின் சந்தேகங்களுக்கு சாட் செய்வதன் மூலம் உடனடியாக தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சாட் வசதியை www.incometaxindia.gov.in என்னும் வலைதளத்தின் மூலம் உபயோகிக்க முடியும்.

2.       இந்திய வங்கிகளில் உபயோகப்படுத்த முடியாத சொத்துக்கள் அதிகமாக தேங்கி உள்ள நிலையில் பணத் தட்டுப்பாடு அதிகமாகி உள்ளது.  இந்த தட்டுப்பாட்டை நீக்க அரசு அளிக்க வேண்டிய நிதி உதவியை இது வரை வழங்காததால் பல வங்கிகளில் பணத்தட்டுப்பாடு குறையவில்லை.   இந்த உபயோகப்படுத்த முடியாத சொத்துக்களில் சுமர் 9.6% வங்கிகளில் உள்ளா வாராக் கடன் ஆகும்

3.       ரிசர்வ் வங்கியின் அக்டோபர் மாத மீட்டிங்கின் விவரங்கள் வெளியாகி உள்ளது.  அதன்படி வங்கி வட்டி விகிதங்களில் அடுத்த காலாண்டுகளுக்கு மாறுதல் ஏதும் இருக்காது என ஜப்பானிய தரகு நிறுவனம் நோமுரா தெரிவிக்கிறது.   சில்லறை வர்த்தகக் குறைவு 3% ஆக குறைந்தாலும் மொத்த வணிகம் 4% அதிகரித்து காணப்படுவதால் இந்த மாற்றமின்மைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.