இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (24/10/2017)

1.       கவுகாத்தியில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி எஸ் டி கவுன்சில் மீட்டிங்கில் சிறு நிறுவனங்களுக்கு கணக்கு பதிவதில் சில சலுகைகள் தரப்படும் என தெரிய வந்துள்ளது.   அந்த நிறுவனங்களுக்கு தாமதாக கணக்கு பதியும் போது விதிக்கப்படும் அபராதத்தை நிக்க கவுன்சில் உத்தேசித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  பல நிறுவனங்கள் தங்களின் வரித்தொகையை விட அபராதத் தொகை அதிகமாக உள்ளதாக புகார் தெரிவித்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

2.       சிங்கப்பூரில் கார் உற்பத்தி விகிதம் வரும் ஆண்டு முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மிகவும் சிறிய பரப்பளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடான சிங்கப்பூரில் வாகனங்களின் எண்ணிக்க்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்துக்கு நிறைய இடையூறுகள் உருவாகிறது.  இதைக் குறைக்கவே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

3.       நாடெங்கும் நடைபெற்று வரும் உட்கட்டு அமைப்புகளின் செலவானது அதிகரித்துக் கொண்டு வருவதாக அரசு கணக்குத் துறை தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் நடைபெறும் 1257 முன்னேற்ற திட்டங்களுக்கான உட்கட்ட அமைப்புச் செலவு ரூ,15,76,903.56 கோடிகள் என திட்டமிடப்பட்டிருந்தது.   தற்போது அதற்கான செலவுகள் முடிவதற்குள் ரூ. 17,49,274.62 கோடிகள் ஆகும் என தெரிய வந்துள்ளது.   அதாவது ரூ.1,72,371.06 கோடிகள் வரை அதிகரித்துள்ளது.

4.       சரியான வேலகளுக்கு சரியான ஆட்கள் கிடைப்பது தற்போது மிகவும் கடினமாக உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.  கடந்த 10 வருடங்களில் வேலைக்கேற்ற ஊழியர் கிடைக்காமல் சுமார் 40 சதவிகித முதலாளிகள் கஷ்டப்படுவதாக தெரிய வந்துள்ளது.   அதே நேரத்தில் சரியான வேலை கிடைக்காத பட்டதாரிகள் சுமார் 55 சதவிகிதம் பேர் உள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

5.       ஏற்றுமதியாளர்கள் தாங்கள்ஃப் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் செலுத்தப்பட்ட ஜி எஸ்டி யின் கிளெய்ம்களை இந்த வாரத்தில் அனுப்பலாம் என ஜி எஸ் டி நெட் ஒர்க் அறிவித்துள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன எனவும் அந்த அறிவுப்பு தெரிவிக்கின்றது.

6.       எண்ணெய் மற்றும் எரிவாயுக் கமிஷனுக்கு சுமார் 60000 சதுர கி மீ பரப்பளவு இடத்தில் எண்ணெய் வளம் கண்டறிவதற்கான வேலைக்கு சுமார் 51 பேர் டெண்டர் அளித்துள்ளனர்.  இந்த முயற்சி வெற்றி பெற்று எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் டெண்டர் அனுப்பு கடைசி தேதி நவம்பர் 15 எனவும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் ஒப்பந்த தாரர்கள் முடிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

7.       ஷெல் கம்பெனிகள் என அழைக்கப்படும் போலி நிறுவனங்களின் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்படும் என அரசு தெரிவித்துள்ளது.   இந்த போலி நிறுவனங்கள் மூலமாக பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் போது ஏராளமான பணம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.   சுமார் 4000 கோடி ரூபாய்கள் இந்த கம்பெனிகள் மூலம் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.