லக்னோ:

னிமேல் மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளே என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

உ.பி. மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகிலேஷ் யாதவ் தலைமை யிலான சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.

நாடு முழுவதும் மோடி அரசால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான  பாஜக கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையை விமர்சித்து வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.  கூட்டணி குறித்து  கடந்த வாரம் அகிலேஷும், மாயாவதியும் ஆலோசனை நடத்தினர். அப்போது, உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதி களில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று இரு கட்சி தலைர்களான மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய, மாயாவதி, இன்றைய செய்தியாளர் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றவர், இன்றைய சந்திப்பின் எதிரொலியாக,  இன்றைய இரவு மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தூக்கமற்ற இரவு என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிவித்தவர்,  நாட்டின் நலன் கருதியே சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளது என்றும், ஏற்கனவே இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு இருப்பதாகவும் கூறினார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து நாடு முழு வதும் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக  தலித்து களுக்கும் சிறுபான்மையினருக் கும் எதிராக  செயல்பட்டு வரும்  பி.ஜே.பி அரசை தூக்கி எறிவதற்காக பழைய வேறுபாட்டை ஒதுக்கி வைத்து விட்டு தற்போது கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம் என்றும் கூறினார்.

மோடி ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றவர்,  பாஜக மற்ற இனத்தவரை பதவி வர மறுத்து வருகிறது.. இனிமேல் அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றவர்,  நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்  என்ற மாயாவதி, எங்களது இந்த கூட்டணியை பார்த்து பாஜக அஞ்சுகிறது  என்றும் கூறினார்.