காலை செய்திகள் 💥  💥 13/7/16 💥
💥தென்காசியில் ஜவுளி கடையில் பயங்கர தீ: லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் சாம்பல்

தென்காசி ஜவுளி கடையில்  தீ
       தென்காசி ஜவுளி கடையில் தீ

நெல்லை: தென்காசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பிரபலான ஜவுளிக் கடையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் தீயில் கருகி நாசமாயின.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே 4 மாடிகள் கொண்ட பிரபலமான ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் கடை மூடப்பட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் கடையின் உள்ளே இருந்து கரும்புகை வெளிவந்தது.
இதைக்கண்ட காவலாளி, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். காற்று வேகமாக வீசியதால், கடையின் உள்ளே தீ ‘மளமள’வென கடை முழுவதும் பரவியது. கடை முழுவதும் துணிகள் அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்ததால், தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, வேகமாக தீ பரவியது. இதைத்தொடர்ந்து சுரண்டை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம் மற்றும் நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
💥புழல் ஜெயிலில் 2 மணி நேரம் நடந்தது; சுவாதி கொலையில் குற்றவாளியை உறுதிசெய்ய அடையாள அணிவகுப்பு; ராம்குமாரை, சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார்
💥ரூ.60 கோடி சிலைகள் திருட்டு வழக்கு: மீண்டும் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் ரூ.60 கோடி மதிப்புள்ள சிலைகள் திருட்டு வழக்கில்,
வெளிநாட்டுக் கும்பல் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்கை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
💥உடல்நலக்குறைவு, சாலை விபத்துக்களில் உயிர் இழந்த 23 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஜெயலலிதா உத்தரவு
💥கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
💥சென்னை டி.பி.சத்திரத்தில் வீட்டில் வைத்து துணிகரமாக கஞ்சா விற்பனை வாலிபர் கைது; 100 கிலோ கஞ்சா பறிமுதல்
💥ஆர்டர்’ செய்த உணவை வாங்க மறுத்ததால் ஆத்திரம் செல்போனில் ஆபாசமாக பேசி பெண்ணுக்கு தொல்லை ஓட்டல் ஊழியர் கைது
💥பேச்சு வார்த்தை நடத்தியோ, சட்ட ரீதியாகவோ பாலாறு தடுப்பணைகள் பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாண வேண்டும் தமிழக அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்பாரதியின் வாயில் வெங்காயத்தை அடைத்து கொன்ற தந்தை!
சரியாக படிக்காததால் தண்டனை என்று வாயில் வெங்காயத்தை வைத்து அடைத்ததால் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை போலீஸார் இன்று கைது செய்தனர்.
💥செங்கத்தில் தம்பதியை தாக்கிய 3 போலீசை பணி நீக்கக்கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்
செங்கம்: செங்கத்தில் தம்பதியை தாக்கிய 3 போலீசை பணி நீக்கம் செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டத்தால் செங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை. காவலர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
💥திமுக மாஜி எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, மதுபான ஆலை உட்பட 40 இடங்களில் ஐடி ரெய்டு!
💥மயில் மோதி விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாவு
மதுரை, கூடல் நகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த லாரன்ஸ் மகன் ரூபன் (27). செல்வந்தன் மகன் மயூரன் (25). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பவானிசாகரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சேவூர், லூர்துபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது, மயில் ஒன்று சாலை கடக்க முயன்று, இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ரூபன் மீது பாய்ந்தது.
இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ரூபன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
💥இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி! – இலங்கை அரசு முடிவு
கொழும்பு: இலங்கையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இலங்கை அரசு முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
💥மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,352 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 46.92 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது
💥பட்டப்பகலில் துணிகர சம்பவம்: சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு குடும்ப தகராறில் மகன் வெறிச்செயல்; பரபரப்பு வாக்குமூலம்
💥ரூ.2.22 கோடி வெளிநாட்டு கரன்ஸிகள் கொள்ளை போனதாக நாடகம்: மூவர் கைது
ரூ.2.22 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்ஸிகள் கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவத்தில் தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனத்தின் உதவி மேலாளர்கள் இருவர் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
💥இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி : யாழ்பானத்தில் போராட்டம்
கொழும்பு: தமிழக மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களில் இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்து கொள்ள அனுமதி வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது
💥பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை! – கொதிக்கும் தமிழிசை
💥ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தி.மு.க.,வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
💥பத்திரிகையாளர்கள் மீது ம.தி.மு.கவினர் தாக்குதல்
சென்னையில் வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில், செய்தியாளர்கள் மீது மதிமுகவினர் பயங்கரத் தாக்குதல் நடத்தினர்.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் ஆவேசமாக பதில் அளித்தார். தான் பேசாததை பேசியதாக ஊடகங்கள் வெளியிடுவதாகவும் வைகோ குறிப்பிட்டார். இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில் செய்தியாளர்களை மதிமுகவினர் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கினார்கள்.
இதில், நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் பாலாஜி, ஒளிப்பதிவாளர் அகிலன் உள்ளிட்ட செய்தியாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
💥தங்கம் விலை சரிவு: வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சற்று சரிவை சந்தித்தது. இருப்பினும், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இருப்பினும், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
💥வங்கி ஊழியர்கள்ஜூலை 29-இல் வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வரும் 29-இல் (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
💥திடக்கழிவு மேலாண்மை தொடர்பான 16 வழக்குகளும் ஒருங்கிணைப்பு:பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
திடக்கழிவு மேலாண்மை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 16 வழக்குகளை ஒருங்கிணைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
💥பள்ளி மாணவர்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்
நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
💥பா.ஜ.க.வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி உள்ளார்.
💥காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை, அவரது இல்லத்திற்கு சென்று பிரியங்கா சந்தித்து பேசினார்
💥இளம் குற்றவாளிகளுக்கு உரிய பாதுகாப்பு, நீதி தேவை
இளம் குற்றவாளிகளுக்கு உரிய பாதுகாப்பு, நீதி கிடைத்திட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
💥காலமானார்:
வேலாயுதம் பிள்ளை
இசைக் கலைஞர் வி.பி.வேலாயுதம் பிள்ளை (85), உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) கும்பகோணத்தில் காலமானார்.
அவருக்கு மனைவி மீனாட்சி, முத்தமிழ் பேரவைச் செயலர் வழுவூர் ரவி உள்ளிட்ட 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
💥காஷ்மீர் மக்கள் அமைதி காக்க வேண்டும்:பிரதமர் மோடி வேண்டுகோள்
💥காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை, அவரது இல்லத்திற்கு சென்று பிரியங்கா சந்தித்து பேசினார். இதில் உ.பி., தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரியவருகிறது.
💥பிரதமர் மோடியின் திட்டங்களால் விவசாயிகளுக்குப் பலன்
பிரதமர் மோடி அறிவித்த பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பெருமளவில் பலன் அடைந்துள்ளனர் என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
💥ஜூலை 15 முதல் கோவையில் சர்வதேச வேளாண் கண்காட்சி-ஜூலை 18 வரை நடக்கும் இக்கண்காட்சியில் 16 வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்பு
💥நேபாளத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பொக்காரா-தில்லி இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
💥கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து:இருவர் சாவு: 24 பேர் காயம்
தருமபுரி அருகே செவ்வாய்க்கிழமை காலை பெங்களூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர் மற்றும் ஒரு மூதாட்டி உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்தனர்.
💥காஷ்மீரில் அதிகரித்து வந்த பதற்றத்தைத் தணிக்க தான் தெரிவித்த ஆலோசனைகளை மத்திய அரசு புறந்தள்ளிவிட்டதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
💥அரசுப் பேருந்தில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை:வீரவநல்லூரில் பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் அரசுப் பேருந்தில் ஏறி, சகோதரர்கள் இருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
💥புதிய சட்ட திருத்தம் வாபஸ் பெறாவிட்டால் சேலத்தில் 250 வக்கீல்கள் தீக்குளிக்க முடிவ
💥சேலத்தில் கார் மீது மோதுவது போல் லாரியை ஓட்டி வந்ததை தட்டிக்ேகட்ட முன்னாள் டிஜிபியை, தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
💥தற்கொலை மிரட்டல் விடுத்த மதுபானக்கூட ஊழியர் மீட்பு
மதுரையில் செவ்வாய்க்கிழமை மேம்பாலத்தில் ஏறி நின்று கீழே குதிக்கப் போவதாக தற்கொலை மிரட்டல் விடுத்த மதுபானக்கூட ஊழியரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
💥ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டிய இருவர் ஹைதராபாத்தில் கைது
💥பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வாலை வரும் 18ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
💥கோவை, நீலகிரியில் இன்று கன மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
💥ஓமனில் தவிக்கும் பெண்களை மத்திய அரசு மீட்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
💥ராஜேந்திர குமாரின் கைது விவகாரம் தொடர்பாக, எண்டவர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (இஎஸ்பிஎல்) எனும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள பதிப்பகத்துக்கு ரூ.80 லட்சம் போலியான ரசீதுகள் மூலம் பணம் பரிமாறப்பட்டதற்கான ஆதாரங்களை சிபிஐ திரட்டியுள்ளது.
💥திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் ரூ.60 கோடி மதிப்புள்ள சிலைகள் திருட்டு வழக்கில், வெளிநாட்டுக் கும்பல் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்கை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் மீண்டும் விசாரணை
💥நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் வரும் 29-இல் (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
💥கேரளாவில், மீண்டும் அரசியல் வன்முறை தலை துாக்கியுள்ளது. கண்ணுார் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவரும், பாரதிய மஸ்துார்சங்க நிர்வாகி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
💥வீட்டை குழந்தைகள் பெயருக்கு மாற்றித் தர மறுத்த கணவர் கொலை:மனைவி, மாமியார் உள்பட 4 பேர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியில், வீட்டை குழந்தைகள் பெயருக்கு மாற்றி எழுதித் தர மறுத்த கணவரை கொலை செய்ததாக, மனைவி, மாமியார் உள்பட 4பேரை போலீஸார் இரவு கைது செய்தனர்.
💥நிகழ் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
💥இளம் குற்றவாளிகளுக்கு உரிய பாதுகாப்பு, நீதி கிடைத்திட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் –விஜயகாந்த்
💥ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் பழங்குடியினர் உயிரிழப்பு: விசாரணை தொடக்கம்
ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாநில காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
💥பொதுமக்கள் முன்னிலையில் தம்பதியைத் தாக்கிய காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
💥மகாராஷ்டிர மாநிலத்தில் மனப்பாடப் பகுதியை சரியாக ஒப்பிக்காத 6 வயது மகளின் வாய்க்குள் வெங்காயத்தைத் திணித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
💥அமானுஷ்ய சக்திகள் குறித்து ஆய்வு செய்து பிரபலமடைந்த கவுரவ் திவாரி, கடந்த 8ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது.
💥விலைவாசி உயர்வு விவகாரம் :நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப மார்க்சிஸ்ட் முடிவு
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, விலைவாசி உயர்வு, ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில்
பிரச்னை எழுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சி முடிவு செய்துள்ளது.
💥ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் புதிய தளபதியாக மெஹ்மூத் கஜ்னவி என்பவரை அந்த அமைப்பு நியமித்துள்ளது.
💥மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் அறிவுசார் மையம், கண்காட்சி உள்ளிட்ட பணிகள் தொடங்குவதற்காக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
💥கடுமையான போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பெங்களூரு காந்திநகர் பகுதியில் ரூ.200 கோடி செலவில் சுதந்திரபூங்காவில் சுரங்க பார்க்கிங் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
💥விலைவாசி உயர்வு விவகாரம் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, விலைவாசி உயர்வு, ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்ப மார்க்சிஸ்ட் முடிவ
💥ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாநில காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினர்.
💥கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) உயர்நிலைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
💥தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவியும், மத்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) உயரதிகாரியுமான சுனிதா (51) விருப்ப ஓய்வில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
💥ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, மாநில ஆளுநர் என்.என்.வோராவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
💥கோவை, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
💥குடிமைப் பணிகள் தேர்வுகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (ஓ.பி.சி.) இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
💥பிரதமர் மோடி அறிவித்த பல்வேறு திட்டங்களால் விவசாயிகள் பெருமளவில்u பலன் அடைந்துள்ளனர்–ஆளுநர் ரோசய்யா
💥சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
💥 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
29483 24 காரட் 10கி
31530
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
52900
பார் வெள்ளி 1 கிலோ
49415