Random image

இன்று பெட்ரோல் விலையில் மற்றுமோர் உச்சம் : தவிப்பில் மக்கள்

சென்னை

ன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.83.13 ஆகி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றிக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதில் இருந்தே தினமும் விலை உயர்ந்துக் கொண்டு வருகிறது.    அதுவும் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.   வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்களின் விலை அபரிதமாக உயர்ந்து வருகிறது.

இதை ஒட்டி ஓட்டலின் உணவுப் பொருட்களின் விலையும் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணங்களும் உயர்ந்துள்ளது.   இதனால் மக்கள் மிகவும் துயருற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.13 ஆகி உள்ளது.   டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.17 ஆகி உள்ளது.