மெரினாவில் ‘ஜல்லிக்கட்டு மணற்சிற்பம்’ வரைந்து இளைஞர்கள் நூதன போராட்டம்

சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கடற்கரையில் மணற்சிற்பம் வரைந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் மெரினா கடற்கரையில் 2 லட்சத்துக்கும் அதிகமாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய போராட்டத்தின் சிறப்பாக ‘காளையை இளைஞர் அடக்குவது போன்ற மணற்சிற்பம்’ வரைந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது போராட்டத்துக்கு வரும் மக்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.