சிட்னி : மழையால் நான்காம் டெஸ்ட்டில் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது

சிட்னி

சிட்னி நகரில் இன்று நடைபெறும் நான்காம் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தி நான்காம் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் செய்து வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடிய 4 டெஸ்ட் பந்தயங்களில் 2 பந்தயங்கள் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா ஒரு பந்தயத்தில் வென்றுள்ளது. கடந்த வியாழன் முதல் சிட்னி நகரில் நான்கு மற்றும் இறுதி டெஸ்ட் பந்தயம் நடைபெற்றுவருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கட்டுகளை இழந்து 622 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கட்டுகலையும் இழந்து 300 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா ஃபாலோ ஆன் அழைப்பு விடுத்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது.

அடிக்கடி மழை பெய்து வருவதால் ஆட்டம் இடையிடையே தடங்கலுடன் நடைபெற்றது. இந்நிலையில் மழையின் காரனமாக வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாளையும் மழை தொடரலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.