செய்தித் துளிகள் (04/07/16 )

கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரும் விவகாரத்தில் மோடி தோல்வியடைந்துவிட்டார் – ராம் ஜெத்மலானி.

திருப்பூர் அருகே  பிடிப்பட்ட 570 கோடி சிக்கிய வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை – வைகோ, திருமாவளவன் வரவேற்பு.

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள்.

 

unnamed

 

குமாரப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி காமராஜ் என்பவர் உயிரிழப்பு.

ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் மாநகராட்சியின் அனுமதி பெற்று வைக்கபட்டிருந்த முதல்வரது விளம்பர பலகையை அகற்ற வேண்டும் எனக்கூறி டிராபிக் ராமசாமி போலிசாருடன் வாக்குவாதம்.

சேலத்தில் சிறுமியை கொலை செய்த 17வயது சிறுவனை சீர்த்திருத்தபள்ளியில்  அடைக்க உத்தரவு.

மதுரையில் கருணை கொலை செய்ய வேண்டி மாற்றுதிறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கூடுவாஞ்சேரியில் தேமுதிக திமுக பிரமுகர்கள் மோதல் பதற்றம் போலீஸ் குவிப்பு .

ஒலிம்பிக் வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக கூறினார் பிரதமர் மோடி.

குற்றாலம் கர்பினி பெண் விடுதியில் எரித்து கொலை.

கார்ட்டூன் கேலரி