இன்றைய டிவிட்டர் டிரெண்டிங்: தேசிய அளவில் முதலிடத்தில் ஸ்டாலின்

திமுக பொதுக்குழுவில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளமான டிவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தேசிய அளவில் டிரெண்டிங்காகி முதலிடத்தில் உள்ளது.

திமுக பொதுக்குழு இன்று கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்படுவது நிச்சயமானது.  இந்த நிலையில் இன்று காலை முதலே டிவிட்டர் சமூக வலைதளத்தில், இந்திய அளவில், திமுக தலைவர் ஸ்டாலின் என்ற பெயரே டிரெண்டிங்காகி முதலிடத்தில் உள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி  மறைவை தொடர்ந்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் வேட்பு மனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

இதுவரை திமுகவின் செயல் தலைவராக இருந்த  மு.க. ஸ்டாலின் , இன்றுமுதல் திமுக தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து, இந்திய அளவில் டிவிட்டரில் மு.க. ஸ்டாலின் பெயர் டிரெண்டிங்காகி முதலிடத்தில் உள்ளது.