ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு: தீர்ப்பு வழங்கக்கூடாது என முறையீடு….

சென்னை:

டப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோரியபோது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் தரப்பினர் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை  பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் இது குறித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், அவரது முறை யீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் அறிவித்தப்படி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும்,  எப்போது தீர்ப்பு வழங்குவது என தங்களுக்கு தெரியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.