மீண்டும் இந்தியா வென்றது; வலுவான இந்தியாவை உருவாக்குவோம்! மோடி டிவிட்

டில்லி:

டைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் இந்தியா வென்றது; வலுவான இந்தியாவை உருவாக்குவோம் டிவிட் பதிவிட்டுள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தல்  நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கையில் பாஜக அமோக முன்னிலை வகித்து வருகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் விதத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், உலக தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,இந்திய மீண்டும் வென்றுள்ளது என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒன்றாக நாம் வளர வேண்டும். ஒன்றாக  நாம் செழிப்பாக உள்ளோம். ஒன்றாக நாம் ஒரு வலுவான மற்றும் உள்ளடக்கிய இந்தியா உருவாக்க வேண்டும், மீண்டும்  இந்தியா வென்றுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.