டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் என்றும் இரவு 9 மணிக்கே மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நாளை முதல் மதியம் 12 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.