ரேஷன் கடையில் கூட்டத்தை தவிர்க்க வீடு வீடாக டோக்கன்… அமைச்சர் தங்கமணி

சென்னை:

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 உள்பட அரிசி, பருப்பு, சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்றும், ஏப்ரல் 2ந்தேதி முதல் அதற்கான பணி தொடங்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கூடும், கூட்டத்தை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கி, குறிப்பிட்ட நாளில்,நேரத்தில் உணவுப்பொருள் வழங்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர்,  தமிழக அரசு அறிவித்தபடி அனைத்து, அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும்,

ஏப்ரல் 2ந்தேதி முதல் 15ந்தேதி வரை இவை வழங்கப்படும் என்றும்,  ரேஷன் கடையில் மக்கள் கூட்டமாக சேர்வதை தடுக்கவும், நிவாரணம் வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூட்டத்தில் அலைமோதுவதை தவிர்க்கும் வகையில், வீடு வீடாக சென்று, ‘டோக்கன்’ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளில், தலா, 100 நபர்களுக்கு மட்டும், கூட்டமில்லாமல், நிவாரணம் வழங்கி முடிக்கப்படும். முன்னதாக, ரேஷன் கடை ஊழியர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, வீடு வீடாக ‘டோக்கன்’ வழங்குவர்.

அந்த டோக்கனில், நிவாரண பொருள் வாங்க வரவேண்டிய நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருக்கம்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில், டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுடன் கடைக்கு சென்று ரூ.ஆயிரம் உன் பருப்பு, எண்ணெயுடன் சர்க்கரை கொண்ட பார்சல் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினர்.

முன்னதாக  கொரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட்சொசைட்டி சார்பில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நிதியுதவி அமைச்சர் தங்கமணியிடம் வழங்கப்பட்டது.