சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்  வீடுகள்..  

சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்  வீடுகள்..

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களைத் தங்க வைப்பதற்காக டோக்கியோவில் பார்த்துப் பார்த்து 11 ஆயிரம் வீடுகள் அழகு மிளிர கட்டப்பட்டன.

இது தவிர பாரா ஒலிம்பிக் போட்டி வீரர்களுக்கு என பிரத்தியேகமாக 4 ஆயிரத்து இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்.-

புத்தம் புதிய அந்த வீடுகள் சும்மா கிடக்கின்றன.

இந்த வீடுகள் அடங்கிய பகுதிக்கு ’‘ஒலிம்பிக் கிராமம்’’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘தனிமைப் படுத்தப்பட்டுள்ள சூழலில்,அந்த கிராமத்தைச் சுற்றி லட்சம் பேர் வீடில்லாமல் உள்ளனர்.

காலியாக இருக்கும் அந்த வீடுகளை, கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க, தற்காலிகமாக தங்களுக்கு ஒதுக்குமாறு, வீடில்லாத டோக்கியோ வாசிகள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகத்துக்கு வீடில்லாதோர் ஆன்லைன் மூலம் மனு அனுப்பி உள்ளனர்.

பல ஆயிரம் பேர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

’’ இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?’’ என்று கேட்டபோது- ‘நோ கமெண்ட்ஸ்’’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டனர், ஒலிம்பிக் நிர்வாகிகள்.

-ஏழுமலை வெங்கடேசன்