சென்னை: தமிழகத்தின் 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில்  சுங்கக்கட்டணம் உயருகிறது. இதில், தமிழகத்தைல் உள்ள 21 சுங்கங்சாவடிகளும் அடங்கும். இந்த சாவடிகளில்,   ரூ.5 முதல் ரூ10 வரை கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகள்  உள்பட நாடு முழுவதும்  565 சுங்கச்சாவடிகள் உள்ளன.  இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வழக்கம்.

குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதியும், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இங்கு கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.

கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ள 21 சுங்கச்சாவடிகளின் விவரம்:

1) புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்),

2) எலியார்பதி (மதுரை),

3) ராசம்பாளையம் (நாமக்கல்),

4) ஒமலூர், சமயபுரம் (திருச்சி),

5) வீரசோழபுரம் (சேலம்),

6) மேட்டுபட்டி (சேலம்)

7) கொடைரோடு(திண்டுக்கல்)

8) வேலஞ்செட்டியூர் (கரூர்),

9) பாளையம் (தர்மபுரி)

10) விஜய மங்கலம் (குமாரபாளையம்)

11) திருமாந்துரை (விழுப்புரம்)
12) செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை)
13) மொரட்டாண்டி (விழுப்புரம்)
14) வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்)
15)நத்தக்கரை (சேலம்),
16) மணவாசி (கரூர்)
17) வைகுந்தம் (சேலம்)
18) விக்கிரவாண்டி (விழுப்புரம்)
19) திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்)
20) பொன்னம்பலப்பட்டி (திருச்சி)
21) விக்கிரவாண்டி டோல்கேட் உள்பட 21  சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே  கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.