பரனூர் சுங்கச்சாவடியில் ரூ.18லட்சத்தை கொள்ளையடித்தது ஊழியர்களே! பரபரப்பு தகவல்கள்

செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு ஏற்பட்ட மோதலின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதுடன், அங்கிருந்த ரூ.18 லட்சம் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவையும் சுங்கச்சாவடி தரப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, சுங்கச்சாவடி ஊழியர்கள் என்பது தெரிய வந்ததுள்ளது. இது தொடர்பான வீசாரணை தீவிரமடைந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் காவல்துறையில் சரண் அடைந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில்,  செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நாராயணன், சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது,  ரூ.18 லட்சம் பணம் மாயமாகி இருப்பதாக  சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் விஜயபாபு என்பவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே சுங்கச்சாவடியில் மோதலுக்கான காரணம் குறித்து உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இன்று காலை உளவுத்துறை டி.எஸ்.பி. பிரதீப்குமார் மற்றும் போலீசார் பரனூர் சோதனை சாவடிக்கு வந்து  சூறையாடப்பட்ட அலுவலக அறைகளை பார்வையிட்டனர். சேதமதிப்புகளையும் ஆய்வு செய்தனர். மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட கூறப்பட்ட புகார் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை நடந்ததுபோல சுங்கச்சாவடி  ஊழியர்களே நாடகமாடி உள்ளதும் அம்பலமாகி உள்ளது.

காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் போலீசில் சரண் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்  சுங்கச் சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.