டெல்லி: இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் மாற்றுத்தி றனாளிகள் பணம் கட்ட தேவையில்லை என்பதற்கான மத்திய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய, மத்தியஅரசின் நெடுஞ்சாலைத் துறை, சாலை பராமரிப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் வரி வசூலித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தும், அதை கண்டுகொள்ளாமல் வரி வசூலில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளின்  பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், அவர்கள் இயக்கும் வாகனங்களுக்கு  இந்தியாவில் சுங்கக் கட்டண வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது தொடர்பான விதிகளை  திருத்தி, இதுகுறித்த அறிவிப்பு 13 ஜூன் 2016 அன்று வட்ட எண் NHAI / CO / 11 // 2016 உடன் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  டோல்கேட் களில், வாகனங்கள் வைத்து, அதற்கான அடையாள அட்டை பெற்றுள்ள  மாற்றுத்திறனாளிகள் பணம் கட்ட தேவையில்லை என  மத்தியஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.