போதைப்பொருள் கடத்தல் : மும்பை ஓட்டலில் தெலுங்கு நடிகை கைது

 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருந்ததால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு விசாரணை, சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கோவாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பந்த்ரா ரயில் நிலைய பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரை வைத்திருந்த சந்தா ஷேக் என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மீரா சாலையில் உள்ள ஓட்டலில் சோதனை நடத்தினர்.

அந்த ஓட்டலில் தங்கி இருந்த தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரியை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவருடன் தங்கி இருந்த ஒருவர் தப்பி சென்று விட்டார்.

கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தேடி வருகிறார்கள்.

கடத்தல் கும்பலுடன் நடிகை ஸ்வேதாவுக்கு உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

– பா. பாரதி