“Tom and Jerry” இயக்குனர் ஜீன் டீச் காலமானார்……!

ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குனர் ஜீன் டீச் (GENE DEITCH) காலமானார்.

ஜீன் டீச் ஆஸ்கார் விருது பெற்ற இல்லஸ்ட்ரேட்டர், அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அவருக்கு வயது 95.

அமெரிக்காவில் புகழ்பெற்ற டாம் டெரிஃபிக் கார்ட்டூன் தொடர்களை உருவாக்கிய ஜீன் டீச், மன்ரோ (Munro) படத்திற்காக 1960 ல் ஆஸ்கர் விருதை வென்றார்.

2004 ஆம் ஆண்டில் அனிமேஷனுக்கான வாழ்நாள் பங்களிப்பிற்காக வின்சர் மெக்கே விருது ஜீன் டீச்சுக்கு வழங்கப்பட்டது. 95 வயதான ஜீன் டீச் வயது மூப்பின் காரணமாக செக் குடியரசின் பிராகா நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.