உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸும் கொரோனா வைரஸால் சிக்கியுள்ளார். நோயை உறுதிப்படுத்திய பின்னர், தங்களை மற்றும் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளுமாறு தனது ரசிகர்களுக்கு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த சூட்டிங் போது ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் (இருவரும் வயது 63) நோய்வாய்ப்பட்டனர். இதற்குப் பிறகு, அவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் டாம் ஞாயிற்றுக்கிழமை ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். அதில்., “உதவியாளர்களுக்கு நன்றி” என்று ஹாங்க்ஸ் ட்வீட் செய்துள்ளார். “நம்மையும் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்வோம்.” என்று பதிவிட்டுள்ளார்.