டாம் வடுக்கன் பாஜகவில் சேர்ந்ததால் பாதிப்பு ஏதும் இல்லை: கேரள காங்கிரஸ் அறிவிப்பு

திருவனந்தபுரம்:

சோனியா காந்தியின் ஆலோசகர் டாம் வடக்கன் பாஜகவில் சேர்ந்ததால், கேரள காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கேரள காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


சோனியா காந்தியின் விசுவாசியாக கருதப்பட்ட டாம் வடக்கன், மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்திருக்கிறார்.
குடும்ப அரசியல் காங்கிரஸில் தலை தூக்கியுள்ளதாகவும், சுயமரியாதை இல்லை என்றும் குற்றஞ்சாட்டி அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

கேரளாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்த அன்று, காங்கிரஸிலிருந்து விலகி அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோசப் வடக்கன் கூறும்போது, “டாம் வடக்கனை நாங்கள் தொலைக்காட்சிகளில் தான் பார்த்துள்ளோம். கேரளாவில் அவரது பங்கு ஏதும் இல்லை.
அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறியது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றார்.