பல்லடம் செல்வராஜ் (Palladam Selvaraj) அவர்களின் முகநூல் பதிவு:
ங்கள் ஊர் பல்லடத்தில் தக்காளி பயிரிடுவோர் அதிகம். தக்காளி பறிக்க  ஒரு நாள் கூலி, 500 ரூபாய்.  ஒரு நபர் பத்து கூடை தக்காளிதான் பறிக்க முடியும். ஒரு கூடையில், தலா ஐந்து கிலோ தக்காளி இருக்கும்.
அந்த ஐந்து கிலோ தக்காளி கூடையை இருபது ரூபாய்க்குத்தான் கொள்முதல் செய்கிறார்கள், எங்களிடம் வாங்கும் வியாபாரிகள்.  ஆனால் அந்த ஒரு கூடை தக்காளி பறிக்க ஐம்பது ரூபாய்  கூலி. (பத்து கூடைக்கு ஐநூறு)

தக்காளியை சாலையில் கொட்டும் விவசாயிகள்
தக்காளியை சாலையில் கொட்டும் விவசாயிகள்

பிறகு கொண்டு செல்லும் வாடகை ,,, ஏற்று கூலி இறக்கு கூலி,,,இவை அனைத்தும் சேர்ந்து இருபது ரூபாய்,, அதுபோக அதிகாலை மார்கெட்டுக்கு சென்று வரும் வரும் செலவு பத்து ரூபாய்,,,
கூட்டி கழித்து பாருங்கள்,,,
தக்காளி பயிரிட்டால் மூன்று மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். இது தவிர வாரம் இரண்டு முறை தண்ணீர் பாச்ச வேண்டும். மூன்று மாத உழைப்புபில் விவசாயிக்கு கிடைப்பது அழுக்கு கோவணம்தான்.
குறைந்தபட்ச விலை கூட கிடைக்காததால் சாலையில் கொட்டப்பட்ட தக்காளி விளைச்சல்..
குறைந்தபட்ச விலை கூட கிடைக்காததால் சாலையில் கொட்டப்பட்ட தக்காளி விளைச்சல்..

நண்பர்களே ! ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு கிடைக்கிறதே என்று சந்தோஷப் படாதீர்கள்… அது பாவமான தக்காளி .!
ஆமாம்,,,!   .விவாசாயின் மடியை பிடிங்கி சாப்பிடுவதுதான்,  அது!
ஆமாம்.. தக்காளி விவசாயி சொல்கிறேன்… அது ஒரு பாவப்பட்ட பழம்.
அதை வீசி எறியுங்கள்..!

  • இப்படிக்கு,

குறைந்தபட்ச விலைகூட கிடைக்காததால், கண் போல் வளர்த்து பறித்த தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயிகளில் ஒருவன் .