நாளை நடப்பது அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல!! அன்வர் ராஜா புது விளக்கம்

சென்னை:

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை (12ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று காலை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கை தொடர்ந்து எம்எல்ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதையடுத்து இந்த வழக்கு தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மீதான முடிவு இன்று இரவு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் பெங்களூரு நீதிமனறம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த எம்பி அன்வர் ராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ தற்போது கூட்டுவது அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல.

அதிமுக அம்மா அணி- அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணவி பொதுக்குழு கூட்டமே நடைபெறவுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா? என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.