நாளை அக்டோபர் 31 ,ஐப்பசி அன்னாபிஷேகம்…..
பொதுவாக லிங்கத்தை மூன்று பாகங்களாகப் பிரிப்பர்.
பிரம்மபாகம்… விஷ்ணு பாகம்… சிவபாகம்…
இதில் மேல்பாகத்தின் மீது இருக்கும் அன்னம் இறுதியில் அதிக அதிர்வு மற்றும் கதிர் வீச்சுடன் திகழும் எனக் கருதப்படுவதால் அதனை மக்களுக்குத் தராமல் குளங்கள், நீர்நிலைகளில் கரைப்பர்.
அன்னாபிஷேக சாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், எள்ளுச் சாதம், பாயசம் போன்றவை பல கோயில்களில் கூடுதல் பிரசாதமாகச் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒரு பங்கைப் பறவைகளுக்குப் போடுவர். மீதமுள்ள உணவை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாகத் தருவர்.
காசியில் கண்கண்ட தெய்வம் அன்னபூரணி. சிவனுக்கே அன்னமிட்டவள். ஜகத்திற்கு என்றென்றும் தன்னுடைய அகப்பையால் அன்னம் வழங்கி வருபவள்.
இதற்கு நன்றியாக மக்கள் தீபாவளியன்று ஏராளமான அன்ன வகைகளைக் குவித்து அவளைத் தொழுகின்றனர்.
கர்நாடகாவின் குடகு ஜில்லாவில் பெரும்பான்ன்மையாக வாழும் கூர்க்ஸ் அல்லது குடவாஸ் என அழைக்கப்படும் மக்கள் அறுவடை முடிந்ததும், முதல் காரியமாக விளைந்த நெல்லில் ஒவ்வொருவரும் தன் பங்கிற்கு அரிசி தானியங்களைக் கோயிலில் கொண்டு வந்து குவிப்பர்.
கோவர்த்தன மலையைத் தூக்கி கிருஷ்ணன் யாதவ இனத்தினரைக் காத்தபோது, பதிலுக்கு யாதவர்கள் கிருஷ்ணனுக்கு நன்றியாக, அவன் கோயிலில் அன்னம், பண்டங்களை மலைபோல் குவித்தனர்.