நாளை பிற்பகல் 2மணிக்கு வெளியாகிறது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல்….

சென்னை:

க்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாளை பிற்பகல் 2 மணிக்கு அறிவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்பட பெரும்பாலான கட்சிகள்  வேட்பாளர்களை அறிவித்து உள்ளன.

இநத் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சில நாட்களாக வேட்பாளர்கள் நேர் காணலை நடத்திய நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வரும் 20ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று எற்கனவே  கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.

அதன்படி, நாளை பிற்பகல் 2 மணிக்கு தனது கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.