சென்னை,

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அரசு முழு அடைப்புக்கு ஆதரவு கிடையாது என்று அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பஸ்கள் வழங்கம்போல இயங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளும் நிலையில், அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை கொண்டு பஸ்களை இயக்க அதிகாரிகள் முயற்சி செய்வது வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பலத்த பாதுகாப்புடன் நாளை பஸ்கள் ஓடும். தமிழகம் முழுவதும் பஸ் டெப்போக்கள் முன்பு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்

நாளை தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பெட்ரோல் வணிகர் சங்கம் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.‘

நாளை வழக்கம் போல் பெட்ரோல் பங்குகள் இயங்கும், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என பெட்ரோலிய பொருட்கள் வணிகர் சங்க தலைவர் முரளி தெரிவித்து உள்ளார்.