Random image

நாளை எதிர்க்கட்சிகளின் பந்த் : பெட்ரோல் பங்குகள் கலந்துக் கொள்ளாது

சென்னை

காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள நாளைய கடை அடைப்பில் தமிழக பெட்ரோல் பங்குகள் கலந்துக் கொள்ளாது என பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமளவில் உயர்ந்து வருகிறது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய கடை அடைப்புக்கு நாளை அழைப்பு விடுத்துள்ளது.   இந்த அடைப்புக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.   நாளை காலை 9 மணி முதல்மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது

தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக, மதிமுக, இந்திய கம்யூனிச்ட், மார்க்சிஸ்ட், தமாகா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.   ஆளும் கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை.    மற்ற கட்சிகள் அனைத்தும் அடைப்பு நடத்த இசைந்துள்ளதால் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  முரளி, “நாடெங்கும் முழு அடைப்பு நடைபெற்றாலும் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்.   பெட்ரோல் விலை தினமும் உயர்த்தப்படுவது கண்டனத்துக்குரியது,   அதே நேரத்தில் இந்த அடைப்பினால் மக்கள் துயருறுவார்கள் என்பதால் பெட்ரோல் பங்குகள் நாளை செயல்பட உள்ளன” என தெரிவித்துள்ளார்.

You may have missed