நாளை மத்திய பட்ஜெட்: சலுகைகள் வழங்கப்படுமா?

(அருண்ஜெட்லி – பைல் படம்)

டில்லி,

நாளை ( பிப்ரவரி 1ந்தேதி) மத்திய பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பொது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போலவே  மத்திய நிதிநிலை அறிக்கையுடன், ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில்  தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாஜக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், வர உள்ள நாடாளுமன்ற   பொதுத்தேர்தலை கவனத்தில்கொண்டு பொது மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றம்  ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்த நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 9ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2வது கட்டத்தொடர் மார்ச் 5ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரை நடைறுகிறது.

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நாளை பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

அடுத்த ஆண்டு, நாடு முழுவதும்  லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே இந்த பட்ஜெட்டில் விவசாயதுக்கும், , நாட்டின்  அடிப்படை கட்டமைப்புக்கும்  முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள நிலையில், தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.