நாளை சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன.  அவசர வழக்குகள் மட்டும் காணொளி மூலம் விசாரணை நடந்தன. தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால் நீதிமன்றம் மீண்டும் பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாகச் சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19 ஆம்தேதிமுதல் மிண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எனவே அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தையும் அரசு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக குழு நாளை கூடுகிறது  மூத்த நீதிபதிகள் 7 பேர் கொண்ட இந்தக் குழு நாளைய கூட்டத்தில் அவசர வழக்குகளை மட்டும் காணொளி மூலம் விசாரிப்பதைத் தொடர்வது குறித்து முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.