நாளை (டிசம்பர் 12)  பிறந்தநாள்:  ரசிகர்களுக்கு ரஜினி அளிக்கப்போகும் இன்ப அதிர்ச்சி என்ன தெரியுமா?

டிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளா டிசம்பர் 12ம் தேதியை அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அன்று ரசிகர்களை ரஜினி சந்திப்பதில்லை என்றாலும், அவருக்கு வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டுவது, கட் அவுட்டுக்கு மாலையிடுவது என்று தடபுடலாக கொண்டாடுவது காலம்காலமாக இருந்துவரும் வழக்கம்.  தற்போதைய நவீன யுகத்தில், அது போன்ற விமரிசைகளோடு, பேஸ்புக் ட்விட்டரிலும் வாழ்த்துகளை கொட்டித்தீர்த்துவிடுவார்கள் ரசிகர்கள்.

ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளுக்காக ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஏனென்றால் கட்சி துவங்கப்போகிறேன் என்று ரஜினி கூறி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னமும் கட்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லையே என்று ரசிகர்கள் ஏங்கிப்போயிருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு நாளை ரசிகர்களை சந்தத்து இது குறித்து ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளின்போதும் ரசிகர்களை சந்திக்கப்போவதில்லை என்றும் அதற்காக வருந்த வேண்டாம் என்றும் பேட்ட படத்தின் பாடல் வெளியீட்டின்போதே ரஜினி அறிவித்துவிட்டார். ரசிகர் சந்திப்பு இல்லை என்றால் கட்சி குறித்த அறிவிப்பும் இருக்காது என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார் ரஜினி.

அதாவது கார்த்திக் சுப்பராஜ் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வரும் பொங்கல் அன்று வெளியாகிறது அல்லவா..   அந்தப்  படத்தின் டீசர் காலை 11 மணிக்கு வெளியாகிறது.

சந்தோசம்தானே ரசிகர்களே..!