Random image

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை:

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் கூட்டம் நாளை நடக்கிறது.

திமுக தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவரது தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதன்முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

கடந்த 5-ம் தேதி கருணாநிதி சமாதியை நோக்கி அழகிரி நடத்திய பேரணியில் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்றனரா? என்ற விசாரணையையும் ஸ்டாலின் நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அப்படி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது தெரிய வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளை நடக்க உள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.