சென்னை,

கி புயல் காரணமாக குமரியில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், தனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று கூறினாளர்.

ஓகி புயல் காரணமாக  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களை கண்டுபிடித்து மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றும்,  கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தியும்  சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நாளை திமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே சிலர்  அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர் என்றும், மீனவர்களுக்கு ஆதரவாக நாளை சென்னை ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், மீனவர்கள் மீட்பு விவகாரம் குறித்து நாளை மறுநாள் ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.