நாளை கூடுகிறது: தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்!

சென்னை,

முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதைதொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

கடந்த 5ந்தேதி இரவு முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதன் முதலாக நாளை காலை 11.30 க்கு தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் அவசரமாக கூடுகிறது.

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மேலும் காவிரிபிரச்சினை மற்றும் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, விரைந்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும், அரசின் நிர்வாக செயல்பாடு பற்றியும் விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.