வால்பாறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை:

கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் வால்பாறை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (20ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.