சென்னை:

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை நாடு முழுவதும்  சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் கோலாகலமாக விற்பனை நடைபெற்று வந்த டாஸ்மாக் கடைகளுக்கும்  விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இதனால் குடிமகன்கள் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக நாளை நாடு முழுவதும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என  பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஏற்று நாளை  நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பேருந்துகள், ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே  டாஸ்மாக் பார்களுக்கும், தனியார் பார்களுக்கும்  முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.