ண்டன்

க்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி நாளை மனிதர்களிடம் சோதிக்கப்பட உள்ளது.

Illustrative vial of coronavirus vaccine

உலகெங்கும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை.  அங்கு இதுவரை 1.29 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  உலக அளவில் கோரோனாவால்  அதிகம் உயிர் இழந்தோர் பட்டியலில் இங்கிலாந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.  இந்த  பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளனர்.  அவ்வகையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இயல் துறை ஒரு தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது.  இந்த ஆய்வுக்காக இங்கிலாந்து அரசு இந்த துறைக்கு 2 கோடி பவுண்டு நிதி அளித்துள்ளது.  இந்த தடுப்பூசியைப் பேராசிரியர் சாரா கில்பர்ட் தலைமையிலான குழு கண்டு பிடித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் சுகாதார செயலர் மாட் ஹான்காக், “கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க அரசு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துக்கு 2 கோடி பவுண்டு நிதி அளித்துள்ளது.   மேலும் 2.25 கோடி பவுண்டு நிதியை விரவில் வழங்க உள்ளது.   தற்போது கண்டுபிடிக்கப் பட்ட தடுப்பூசி சோதனை நிலையிலுள்ளது.  வரும் வியாழன் (அதாவது நாளை) இந்த தடுப்பூசி மனிதர்களிடம் சோதிக்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் குழு 500க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களை இந்த தடுப்பூசி சோதனைக்காக நியமித்துள்ளது.   இவர்கள் ஒரு வாரம் முதல் 90 வருடங்கள் வரை வயதானவர்கள் ஆவார்கள்.   இது புதிய நோய் என்பதால் இந்த சோதனை முடியக் குறைந்தது ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.   இந்தக் குழு சென்ற வாரம் செப்டம்பருக்குள் தடுப்பூசி தயாராகும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.