Random image

நாளை இமானுவேல் சேகரன் நினைவு நாள்: சிவகங்கையில 144 தடையுத்தரவு

பரமக்குடி:

மானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு, சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் இன்று முதல் 13ந்தேதி வரை  வரை  4 நாட்கள் 144 தடையுத்தரவு போடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பரமக்குடி நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதன் காரணமாக எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இன்று முதல் 13ந்தேதி வரை நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று எஸ்.பி. ஜெயச்சந் திரன் தெரிவித்துள்ளார்.

பரமக்குடியில் நாளை  இமானுவேல் சேகரன் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்கான வழித்தடங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடி நகரில் ஐந்துமுனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆர்ச் பகுதி, சந்தைக்கடைத் தெரு மற்றும் நினைவிடம் செல்லும் விலக்குச்சாலை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் நினைவிடத்திற்கு செல்வோர் உரிய வழித்தடங்களில் மட்டும் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் உயர் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்து ஆயுதம் தாங்கிய போலீஸாரும், வீடியோ கேமராவுடன் கூடிய போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

அஞ்சலி செலுத்த வருவோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் அனைத்து இடங்களிலும் கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.