Random image

நாளை வாழப்பாடியார் 81வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து அஞ்சலி…

சென்னை: றைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமமூர்த்தியின்  81வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை அபிராமபுரத்தில் உள்ள வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி என்ற ஊரைச்  சேர்ந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. இவர்,  6 முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியை உதறி தள்ளி தமிழக விவசாயிகள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். நாளை அவரது 81வது  பிறந்தநாள், காங்கிரஸ் கட்சியினரால்  நாளை கொண்டாடப்படு கிறது.

இதையொட்டி சென்னை மந்தவெளியில் உள்ள ராஜீவ் பவனில் அமைக்கப்பட்டுள்ள வாழப்பாடியார் திருவுருக சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காலை 9.30 மணி அளவில்   மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்.  அதைத் தொடர்ந்து,  மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் வாழப்பாடியாரின் திருவுருவப் படத்துக்கு  மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும், வாழப்பாடியார் மீது அன்புகொண்ட நல்உள்ளங்களும் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சேலத்திலும் வாழப்பாடியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருப்பதாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்  அறிவித்து உள்ளார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு  அழைப்பு விடுத்துள்ளார்.